தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு - tamil nadu election commission

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் குளறுபடி நடந்த ஒன்பது வாக்குச்சாவடிகளில் நாளை (2020 ஜனவரி 1ஆம் தேதி) மறுவாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டில் 9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
தமிழ்நாட்டில் 9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

By

Published : Dec 31, 2019, 8:06 PM IST

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் வாக்குப்பதிவின்போது சில வாக்குச் சாவடிகளில் ஏற்பட்ட குளறுபடியால் அப்பகுதிகளில் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து குளறுபடி நடந்த கடலூர், தூத்துக்குடி, நாகப்பட்டினம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 9 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

இந்தத் தேர்தலானது நாளை காலை 7 மணிமுதல் 5 மணிவரை நடைபெறும். மறுவாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் காவல் துறையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:2ஆம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் 28.81 விழுக்காடு வாக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details