சென்னை: தமிழ்நாட்டில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்த்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய குழு உறுப்பினர் என 27,003 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெற்றது. மேலும் 28 மாவட்டத்திற்கு காலியாக இருந்த 789 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று முடிந்தது. தேர்தல் முடிவுகள் அக்டோபர் 12ஆம் தேதி வெளியானது.
நாளை பதவியேற்பு
இதில் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு நாளை (அக்.20) பதவி ஏற்றுக்கொள்வார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மறைமுக தேர்தல்
அக்டோபர் 22ஆம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழுத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தலும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிபெற்றவர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பதவி ஏற்பார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மீதமுள்ள இடங்களுக்கும் விரைவில் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையம்