தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்’- கே.கேசி பாலு வழக்கு

சென்னை: பெருந்துறை தொகுதியின் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயக்குமாரின் வெற்றியை எதிர்த்து, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் கே.கேசி பாலு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்குதொடர்ந்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jun 16, 2021, 7:21 PM IST

ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் 14 ஆயிரத்து 507 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அவரது வெற்றியை எதிர்த்து அத்தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளர் கே.கேசி பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், “மின்னணு வாக்குப்பதிவில் சில குறைபாடுகள் இருந்தன. அதை சுட்டிக்காட்டியும் அதனை நிவர்த்தி செய்யவில்லை. வாக்கு எண்ணிக்கையிலும் சில தவறுதல்கள் இருந்தன. ஜெயக்குமாரின் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்” என தனது மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: விராலிமலை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றி: திமுக வேட்பாளர் வழக்கு

ABOUT THE AUTHOR

...view details