தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கொடுங்குற்றவாளிகள், ரவுடிகள் உள்ளிட்டவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னையில் ஈடுபடாமல் தடுப்பதற்கு தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி தமிழ்நாடு காவல்துறை வடக்கு மண்டலம் சார்பில் இன்று (பிப்.24) ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 46 ரவுடிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 32 ரவுடிகளும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ரவுடிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில்10 ரவுடிகள் என மொத்தம் 132 ரவுடிகளை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.