சென்னை விமான நிலையம் சர்வதேச முனையத்தின் வருகை பதிவு அருகே வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் பகுதி உள்ளது. அப்பகுதியில் இன்று (காலை) 50 வயது நிறைந்த முதியவர் ஒருவர் உறங்குவது போல் படுத்து கிடந்துள்ளார். காலை 9 மணி ஆகியும் எழும்பாததால் சந்தேகமடைந்த கார் ஓட்டுநர்கள், அவரை எழுப்ப முயற்சித்தனர். அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் எழவில்லை.
அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து கார் ஓட்டுநர்கள் சிலர் விமான நிலைய காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு தகவலளித்தனர். மருத்துவர்கள் வந்து பாா்த்துவிட்டு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.