தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமைச் செயலகம் முன்பு தற்கொலை முயற்சி; கடனை திருப்பி தராததால் தீக்குளித்ததாக முதியவர் வாக்குமூலம் - மாஜிஸ்திரேட்

தலைமைச் செயலகம் முன்பு தனக்குத்தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார்

தலைமைச் செயலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி முதியவர் தற்கொலை முயற்சி
தலைமைச் செயலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி முதியவர் தற்கொலை முயற்சி

By

Published : Jun 2, 2022, 2:12 PM IST

திருவள்ளுர்: திருவிளாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (75). நேற்று தலைமைச் செயலகம் முன்பு
தனக்குத் தானே பெட்ரோலை தலையில் ஊற்றி தீ வைத்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக்கண்ட பாதுகாப்பு பிரிவு போலீசார் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினர்.

தீ வைத்துக் கொண்ட நபர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 59 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் ஜார்ஜ்டவுன் 6ஆவது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் சந்திரசேகர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வரும் பொன்னுசாமியிடம் வாக்குமூலம் பெற்றார். பின்பு வீடியோ பதிவு செய்யப்பட்டது.

தற்கொலைக்கு முயன்ற பொன்னுசாமி அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கு ரூ.14 லட்சத்தை கடனாக கொடுத்துள்ளார். கடனை பெற்ற சுப்பிரமணி அதனை திருப்பித் தராததால் பொன்னுசாமி போலீசில் புகார் கூறியுள்ளார். போலிசார் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. திருவள்ளுர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

இதையும் படிங்க: சென்னை தலைமைச் செயலகம் முன்பு முதியவர் தீக்குளிப்பு

ABOUT THE AUTHOR

...view details