சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன்(54). இவர், தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் ஐந்து வயது சிறுமியை அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது - பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது
சென்னை: ஐந்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 54 வயது முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
![சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது கைது செய்யப்பட்ட கண்ணன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:47:54:1595513874-tn-che-09-pocso-script-7202290-23072020193414-2307f-1595513054-240.jpg)
கைது செய்யப்பட்ட கண்ணன்
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே பெற்றோர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் கண்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.