சென்னை:சென்னையை அடுத்த கீழ்க்கட்டளை மருத்துவர் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் நம்பிராஜன் (76). இவர் பிரபல சிமென்ட் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாப்பா (75), ஓய்வுபெற்ற ஆசிரியர்
இவர்களுக்கு குழந்தை கிடையாது. வயதான இவர்கள் தனிமையில் வசித்து வந்துள்ளனர். இதில், நம்பிராஜன் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவரது மனைவி பாப்பா நுரையீரல் புற்றுநோய் காரணமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நம்பிராஜனின் சகோதரர் சுப்பிரமணி தொலைப்பேசியில் அவரை தொடர்புகொண்டபோது நீண்ட நேரமாக போனை எடுக்காததால் சந்தேகமடைந்து வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டு இருந்ததால் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது, நம்பிராஜன் வீட்டின் வரவேற்பறையிலும், அவரது மனைவி பாப்பா வீட்டின் படுக்கை அறையிலும் தற்கொலை செய்துகொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.