தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் - Eighth standard public examination hall tickets available now

சென்னை : எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வர்கள்
தேர்வர்கள்

By

Published : Sep 21, 2020, 7:17 PM IST

எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கோவிட்-19 தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, வரும் செப்.29ஆம் தேதி அன்று தொடங்கவுள்ள தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத, ஏற்கெனவே சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக தனித்தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில், www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளை விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து விண்ணப்பித்தவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்.

இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்குத் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க :ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளனர் - வைகோ ஆவேசம்

ABOUT THE AUTHOR

...view details