தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

8ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு வரும் 29ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் - இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு

தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் வரும் 29ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

8ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் 29 ஆம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்
8ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள் 29 ஆம் தேதி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

By

Published : Sep 27, 2022, 4:33 PM IST

Updated : Sep 27, 2022, 4:38 PM IST

சென்னை:அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 8 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.

இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 29 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார். தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:போட்டி தேர்வுகளுக்கு ஆயத்தமாக தமிழக அரசு வழங்கும் மெய்நிகர் பயிற்சி வகுப்புகள்...

Last Updated : Sep 27, 2022, 4:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details