தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துபாயிலிருந்து சென்னை வந்த 8 பேருக்கு கொரோனா அறிகுறி! - corona updates

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த பயணிகளில் எட்டு பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளது.

எட்டு பேருக்கு கரோனா அறிகுறி
எட்டு பேருக்கு கரோனா அறிகுறி

By

Published : Mar 17, 2020, 12:06 PM IST

Updated : Mar 17, 2020, 2:40 PM IST

துபாயிலிருந்து இன்று அதிகாலை சென்னைக்கு வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ஜொ்மனி, பிரான்ஸ், இத்தாலி, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளில் பணிபுரியும் 8 பயணிகளுக்கு காய்ச்சல், சுவாசிப்பதில் சிரமம் இருந்துள்ளதை கண்டுபிடித்தனா்.

எட்டு பேருக்கு கரோனா அறிகுறி

இதையடுத்து, அவா்களை விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முடியாதபடி, அங்குள்ள ஒரு அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். மீண்டும், மருத்துவ சோதனை செய்தனா். அதன் பின்னர் 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பிற்காக சிறப்பு மருத்துவ முகாமில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 8 பேரும் சிறப்பு ஆம்புலன்சில் பூவிருந்தவல்லி சிறப்பு மருத்துவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இந்த முழுநாள் கண்காணிப்பிற்கு பின்பு, பாதிப்பு இல்லாதவா்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, அந்தந்த பகுதிகளில் உள்ள பொது சுகாதாரத்துறையினரின் தொடா் கண்காணிப்பில் 14 நாட்கள் இருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடைகளுக்கும் மாஸ்க், சானிடைசர் வழங்க உத்தரவு!

Last Updated : Mar 17, 2020, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details