சென்னை:மேற்கு தாம்பரம் பழைய ஸ்டேட் பேங்க் காலனியைச்சேர்ந்தவர் சக்தி கணேஷ் (வயது-19). இவர் தாம்பரம் ஒத்தவாடை தெருவைச்சேர்ந்த 17-வயது இளம்பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் சிறுமியின் வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், இளம்பெண்ணின் சித்தப்பா வேலு மற்றும் அவரது மகன்கள் சேர்ந்து,சக்தி கணேஷை 10 நாட்களுக்கு முன்பு கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் சக்தி கணேஷ், மேற்கு தாம்பரம் திருநீர்மலை சுடுகாடு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வேலுவின் மகன் விக்னேஷ் (வயது-21) மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து இளம்பெண்ணை காதலிக்கக்கூடாது என அவரை எச்சரித்து, மீறி காதலித்தால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து சக்தி கணேஷ் தனது நண்பர்களான அருண்குமார் (வயது-19); கரண் குமார்(வயது -23) மற்றும் 17-வயதுடைய சிறுவர்கள் இருவருடன் சேர்ந்து, வேலுவின் வீட்டிற்குச்சென்றுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு இருதரப்பிற்கும் இடையே கைகலப்பாக மாறியது. அதில் சக்தி கணேஷ் மற்றும் இளம்பெண் தரப்பில் ஒருவரையொருவர் மாறி மாறி கற்களாலும் பாட்டில்களாலும் தாக்கிக்கொண்டனர்.