தமிழ்நாடு

tamil nadu

குடிநீர் பஞ்சத்தை போக்க எட்டு புதிய திட்டங்கள்! - எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

சென்னை: சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க எட்டு புதிய கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

By

Published : Jul 8, 2019, 7:36 PM IST

Published : Jul 8, 2019, 7:36 PM IST

Updated : Jul 8, 2019, 8:41 PM IST

உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி

திமுக சட்டப்பேரவை உறுப்பினர் நந்தகுமார் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்துப் பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, "குடிமராமத்து திட்டம், கடல்நீர் குடிநீர் திட்டம், அதிக மரங்கள் வளர்ப்புத் திட்டம், 8 புதிய கூட்டுக்குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சென்னையின் குடிநீர் தேவையை நிரந்தரமாகப் போக்கும் பொருட்டு, நாள்தோறும் 870 எம்.எல்.டி கிடைக்கும் வகையில் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதில், நெம்மேலியில் 150 எம்.எல்.டி கடல்நீர் குடிநீர் திட்டம் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் 400 எம்.எல்.டி குடிநீர் திட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் செயல்படுத்தப்படும். இது போன்ற நீண்டகாலத் திட்டங்கள் மூலம் சென்னைக்கான நிரந்தர குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது" என்றார்.

பின்னர், கொடுங்கையூர் குப்பைக்கிடங்கு இடம் மாற்றம் செய்யப்பட வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் சேகர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சென்னை பெருநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் பதனிடுதலுக்கும், மறுசீரமைப்புக்கும் உள்ளாக்கப்படுகிறது. நகரில் பல்வேறு பகுதிகளில் குப்பை பதப்படுத்தும் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு வரக்கூடிய குப்பையை பாதியளவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

Last Updated : Jul 8, 2019, 8:41 PM IST

ABOUT THE AUTHOR

...view details