சென்னை:துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச்சேர்ந்த முருகன் கோவிந்தராஜ் (32) என்ற பயணியின் மீது சந்தேகம் ஏற்பட்டது. அந்தப் பயணியை நிறுத்தி சோதனையிட்டனர். அவருடைய உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் பயணியை முழுமையாக சோதித்தனர்.
அவருடைய ஜீன்ஸ் பேண்டில் அணிந்திருந்த பெல்டின் பக், தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவருடைய ஜீன்ஸ் பேண்டிற்குள் 3 தங்கக்கட்டிகள் வைத்து தைக்கப்பட்டு இருந்தன. அவரிடம் இருந்து ரூ.36 லட்சம் மதிப்புடைய 580 கிராம் தங்கத்தை சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.