தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காணாமல்போன 8 மீனவர்கள் தமிழ்நாடு வருகை - அமைச்சர் ஜெயக்குமார் தகவல் - மீன்வளம் , பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை

சென்னை: காணாமல்போன எட்டு சென்னை மீனவர்கள் வரும் 29ஆம் தேதி தமிழ்நாடு வருகின்றனர் என மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன 8 சென்னை மீனவர்கள் தமிழகம் வருகை- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
காணாமல் போன 8 சென்னை மீனவர்கள் தமிழகம் வருகை- அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

By

Published : Sep 26, 2020, 10:55 PM IST

இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த ஜூலை மாதம் 23ஆம் தேதியன்று சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒன்பது மீனவர்களுடன் மீன்பிடிக்கச் சென்று ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று கரை திரும்ப வேண்டிய IND - TN 02 - MM - 2029, என்ற பதிவெண் கொண்ட செவுள்வலை ஆழ்கடல் மீன்பிடிப்பு விசைப்படகு கரை திரும்பவில்லை.

இந்நிலையில் மீன்வளத்துறை, இந்திய கடலோர காவல்படை, இந்திய கப்பல்படை, சென்னை மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த உள்ளூர் விசைப்படகுகளைக் கொண்டு காணாமல்போன மீனவர்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் தமிழ்நாடு அரசு, இந்திய வெளியுறவுத் துறை வழியாக மியான்மர், வங்காளதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் கடல் பகுதிகளிலும் தேடுவதற்கு வேண்டுகோள்விடுத்தது.

இதற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியின் பலனாக கடந்த செப்டம்பர் 14ஆம் தேதியன்று அதிகாலை காணாமல்போன 09 மீனவர்களும் மியான்மர் கடற்பகுதியில், மியான்மர் நாட்டு கடற்படையினரால் மீட்கப்பட்டு பத்திரமாக கரைக்கு கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு போதுமான உணவு மற்றும் இதர வசதிகள் அங்குள்ள இந்திய தூதரகம் வழியாக செய்து தரப்பட்டது.

இதனையடுத்து மத்திய, மாநில அரசு இந்திய தூதரகம் வழியாக மேற்கொண்ட தொடர் முயற்சியின் காரணமாக 08 மீனவர்கள் வரும் 28ஆம் தேதியன்று மியான்மர் நாட்டிலிருந்து விமானத்தின் மூலம் டெல்லி அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு, 29ஆம் தேதியன்று தமிழ்நாடு வருவதற்கு உரிய நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மேலும், மீட்கப்பட்ட பிறகு, தனிப்பட்ட நிகழ்வில் காணாமல்போன எஞ்சிய மீனவர் பாபுவை தேடும் பணி மியான்மர் நாட்டு கடற்படையினரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...ஜி.எஸ்.டி. இழப்பீட்டைப் பெற முன்வருவரா முதலமைச்சர்? - மு.க. ஸ்டாலின் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details