சென்னை முகப்பேரில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தற்போது உள்ள ஊரடங்கு காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில் ஆலயத்தின் உள்ளே புற்றில் இருந்த எட்டு அடி நீளமுள்ள நாக பாம்பு வெளியே வந்து அங்கும் இங்குமாக சுற்றிக் கொண்டிருந்தது.
ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் இருந்த பிடிபட்ட 8 அடி பாம்பு - eight feet long snake in siddhi vinayakar temple caught
சென்னை: முகப்பேர் ஸ்ரீ சித்தி விநாயகர் கோயிலில் சுற்றிக்கொண்டிருந்த நாக பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
eight feet long snake in siddhi vinayakar temple caught
இதனை கண்டு அச்சம் அடைந்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த ஜெ. ஜெ நகர் தீயணைப்புத் துறையினர், நாக பாம்பை சாதுரியமாக பிடித்து தயாராக வைத்திருந்த சாக்கு பையில் போட்டு கட்டினர். இதையடுத்து அந்த நாக பாம்பு செங்குன்றம் வனப்பகுதியில் விடப்பட்டது.
இதையும் படிங்க... சாரைப் பாம்பை வெட்டி கோயில் வேல் கம்பியில் குத்திய குடிமகன்! நடந்தது என்ன?