தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எழும்பூர் கண் மருத்துவமனை வழக்கு விசாரணை 11ஆம் தேதி ஒத்திவைப்பு! - eye hospital tree cutting case

சென்னை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆலோசனை பெற்று அறிக்கையாக சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

egmore-eye-hospital-tree-cutting-case
egmore-eye-hospital-tree-cutting-case

By

Published : Dec 9, 2019, 8:23 PM IST

உலகிலேயே மிகவும் பழமையான இரண்டாவது கண் மருத்துவமனையான சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை. இந்த வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக நான்கு ஏக்கர் பரப்பளவில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்காக திட்டமிட்டு, அப்பகுதியில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு எடுக்கப்பட்டது.

மரங்கள் வெட்டும் முடிவை எதிர்த்து கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு, மரங்களை வெட்ட இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர். சுரேஷ்குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மரங்களை வேரோடு எடுத்து, வேறு இடத்தில் நடுவதற்காக ஐந்து லட்சம் ரூபாய் செலவாகும் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மரங்களை வேறொரு இடத்தில் நடும்போது, அவை மீண்டும் துளிர்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்பது குறித்து தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ஆலோசனை பெற்று அறிக்கையாகச் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க:

டெல்லியாக சென்னையை மாற்றாதீர்; மரங்களை வெட்டாமல் கட்டடம் கட்ட சாத்தியமுண்டா?

ABOUT THE AUTHOR

...view details