தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஹரி நாடாருக்கு வரும் 16ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்! - Egmore court

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரி நாடாரை மார்ச் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க எழும்பூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹரி நாடாருக்கு 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!
ஹரி நாடாருக்கு 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

By

Published : Mar 2, 2023, 10:25 PM IST

சென்னை: கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதியில் நாடார் சமுதாயம் சார்பாக சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு 37,726 வாக்குகள் பெற்று 3ஆம் இடம் பிடித்து கடும் போட்டியை அளித்தவரும், தமிழ்நாட்டில் சுயேட்சை வேட்பாளர்களில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்த வேட்பாளருமான ஹரி நாடாரை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், குற்ற வழக்கு ஒன்றில் கடந்த 2021 மே மாதம் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரை பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் அடைத்தனர். அந்த நேரத்தில் கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் பரக்கத் என்ற தொழிலதிபர், ஹரி நாடார் மீது மோசடி புகார் ஒன்றை தமிழ்நாடு காவல் துறையினரிடம் வழங்கி இருந்தார்.

இந்த மோசடி புகார் அளித்து 22 மாதங்கள் கடந்த நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளர் பிரசித் தீபா தலைமையிலான காவல் துறையினர், பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வரும் ஹரி நாடாரை, கடந்த பிப்ரவரி 27 அன்று கைது செய்தனர். இந்த நிலையில் மோசடி புகாரில் கைது செய்யப்பட்ட ஹரி நாடாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் ரேவதி, வருகிற மார்ச் 16ஆம் தேதி வரை ஹரி நாடாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து ஹரிநாடாரை காவல் துறையினர் பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க:ஹரி நாடார் மீண்டும் கைது - முழுப் பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details