சென்னை:இந்திய குடிமைப் பணிகளுக்காக இன்று நடைபெற்ற தேர்வில் பங்கேற்க வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு முறையான வசதி செய்து தரப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்று நடைபெற்ற இந்திய குடிமைப் பணி தேர்விற்காக, 72 நகரங்களில் சுமார் 2,569 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இத்தேர்வினை, சுமார் 10.58 லட்சம் தேர்வர்கள் எழுதினர். சென்னையிலுள்ள 62 தேர்வு மையங்களில் மட்டும் சுமார் 22 ஆயிரம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு மையங்களில் கரோனா கால வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டன.
சக்கர நாற்காலி இல்லாமல் அவதிப்பட்ட மாற்றுத்திறனாளி தேர்வர் சென்னை எழும்பூர் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சக்கர நாற்காலிகள் வசதி செய்து தரப்படாததோடு, அப்பள்ளியில் சாய்தள வசதி செய்து தரப்படவில்லை.
மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளியின் வாசலில் இருந்தே சாய்வுதளம் ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், சாய்தள வசதி செய்து கொடுக்கப்படாததால் மாற்றுத்திறனாளிகள் அவதியடைந்தனர்.
இதையும் படிங்க:'இங்கு எதுக்கு வருகிறீர்கள்' மாற்றுத்திறனாளிகளை விரட்டியடிக்கும் அரசு அலுவலர்!