சென்னை: எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு இந்தியா முழுவதும் 202 நகரங்களில் 3,858 மையங்களில் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது.
நீட் 2021 நுழைவுத் தேர்வை 15 லட்சத்து 44 ஆயிரத்து 275 மாணவர்கள் எழுதினர். இவர்களில் 8 லட்சத்து 70 ஆயிரத்து 74 பேர் தகுதி பெற்றுள்ளனர்.
தேசியத் தேர்வு முகமை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்களையும் அறிவித்துள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வினை விட 2021ஆம் ஆண்டு நீட் தேர்வில் தகுதி மதிப்பெண்கள் குறைந்துள்ளது. ஆனால், அதே நேரத்தில் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் 2020ஆம் ஆண்டில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 406 மாணவர்கள் பெற்றனர்.
தகுதி மதிப்பெண்
நடப்பு ஆண்டில் 7 லட்சத்து 70 ஆயிரத்து 857 மாணவர்கள் 50 விழுக்காடு மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
ஓபிசி பிரிவில் 66 ஆயிரத்து 978 பேரும், எஸ்.சி. பிரிவில் 22 ஆயிரத்து 384 பேரும், எஸ்.டி. பிரிவில் 9 ஆயிரத்து 312 பேரும் தகுதி பெற்றுள்ளனர். ஆனால், இவர்களுக்கான தகுதி மதிப்பெண்கள் கடந்த ஆண்டைவிட குறைத்து தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இளநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் கட்ஆஃப் மதிப்பெண்கள் உயருமா? என்பது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கூறியதாவது, "நீட் தேர்வில் இயற்பியல் தேர்வுத்தாள் கடினமாக இருந்ததால், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறையும் என எதிர்பார்த்தோம்.
தேர்ச்சி பெற்றதற்குக் காரணம்