இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ’அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு காலத்தில் பள்ளி வளாகத்தினுள் மாணவர்கள் உட்பட பொதுமக்கள் யாரும் இருக்கக்கூடாது. பள்ளிகளின் மைதானங்களில் கிரிகெட், வாலிபால், கால்பந்து, கபடி உள்ளிட்ட விளையாட்டுகளில் சிறுவர்கள் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அலுவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
குழுவாக பள்ளி மைதானங்களில் விளையாடுவது கரோனா தொற்று பரவ வழி வகுக்கும். பள்ளிக்காவலர் உள்ள பள்ளிகளில் அக்காவலர்கள் பள்ளியை மூட வேண்டும். காவலர் இல்லாத பள்ளிகளில், பள்ளியின் முகப்பு கதவை பள்ளி வளாகத்தில் யாரும் நுழையாத வகையில் எப்போதும் பூட்டியே வைத்திருக்க வேண்டும்.