தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இந்த ஆண்டு இணையதளம் மூலம் பெறப்பட்டன.
அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு மூன்று லட்சத்து 16 ஆயிரத்து 795 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்து 810 மாணவர்கள் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
மேலும் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 832 மாணவர்கள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர். மாணவர்கள் விண்ணப்பித்துள்ள கல்லூரிகளில் அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று (ஆக. 26) வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரமும் மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.