தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் வெளியீடு! - public exam

சென்னை: 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விபரம்  10ஆம் வகுப்பு தேர்வு எழுதம் மாணவர்கள்  public exam  education department release the deatail abou public exam students count detail
10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரம்

By

Published : Feb 18, 2020, 3:11 PM IST

இந்த ஆண்டு 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விவரம் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு மார்ச் 2ஆம் தேதி முதல் பொதுத்தேர்வுகள் தொடங்குகின்றன. அதன்படி, இந்த ஆண்டு 10ஆம் வகுப்புத் தேர்வை 9 லட்சத்து 44 ஆயிரத்து 569 மாணவர்களும் 11ஆம் வகுப்புத் தேர்வை 8 லட்சத்து 26 ஆயிரத்து 082 மாணவர்களும் எழுத உள்ளனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து 358 மாணவர்கள் எழுத உள்ளனர்.

கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 9 லட்சத்து 21 ஆயிரத்து 339 மாணவர்கள் எழுதியிருந்தனர், இந்த ஆண்டு கூடுதலாக 23 ஆயிரத்து 230 மாணவர்கள் எழுதவிருக்கின்றனர்.

அதுபோல, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 39 ஆயிரத்து 164 மாணவர்கள் கூடுதலாகவும், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 11 ஆயிரத்து 21 மாணவர்கள் குறைவாகவும் எழுதவுள்ளனர்.

இந்தாண்டு 10,12ஆம் வகுப்பு மாணவர்கள் புதிய பாடத்திட்டத்தின் கீழ், முதல் முறையாகத் தேர்வை எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்!

For All Latest Updates

TAGGED:

public exam

ABOUT THE AUTHOR

...view details