தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் எவ்வித திருத்தமின்றி ஒப்படைக்க உத்தரவு - tenth exam results

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்களில் எந்த திருத்தமும் செய்யாமல் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அலுவலர் தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது எப்படி? பள்ளிக்கல்வித்துறை தகவல்
பத்தாம் வகுப்பு மதிப்பெண் வழங்குவது எப்படி? பள்ளிக்கல்வித்துறை தகவல்

By

Published : Jun 12, 2020, 1:21 PM IST

தமிழ்நாட்டில் 2019-20ஆம் கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான படித்த மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதேபோல், 11ஆம் வகுப்பில் நடைபெறாத பாடத்திற்கான தேர்வும் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

இந்த மாணவர்களுக்கான மதிப்பெண் காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். இதன்படி, காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளில் 80 விழுக்காடும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 விழுக்காடும் மதிப்பெண்களும் வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில், 10ஆம் வகுப்பில் படித்த மாணவர்கள் மார்ச் 21ஆம் தேதி வரையில் பள்ளிக்கு வருகைபுரிந்ததற்கான பதிவேடுகளை இன்று மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பதினொன்றாம் வகுப்பு

இதைப் போலவே 11ஆம் வகுப்பு மாணவர்களில் வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல் பாடத்தேர்வுகளை எழுதவிருந்த மாணவர்கள் வருகைப்பதிவேட்டில் பிப்ரவரி 29ஆம் தேதிவரை முழுமையாக இருக்கிறதா? என்பதைச் சரிபார்த்துவிட்டு இன்று மாலைக்குள் ஒப்படைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் 20 விழுக்காடு மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த மாணவர்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போலவே மதிபெண்கள் கணக்கிடப்படும்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அலுவலர் கூறும்போது, மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு மதிப்பெண்கள் பள்ளியின் பதிவேட்டிலும், மாணவர்களின் தரவரிசை அட்டையிலும் பதியப்பட்டு இருக்கும். மேலும் மாணவர்களின் பெற்றோர், பள்ளியின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர்கள் அதில் கையொப்பம் போட்டு இருப்பார்கள். அந்த மதிப்பெண்கள் பெறப்பட்டு கணக்கிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழில் அச்சிட்டு வழங்கப்படும் என்றார்.

இதையும் படிங்க: குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details