அறிவுசார் சொத்துரிமை குறித்து இரண்டு நாள் தேசிய அளவிலான பயிற்சி கருத்தரங்கம், சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இன்று தொடங்கியது. நிகழ்ச்சியை டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தொடக்கி வைத்தார். இதில், முன்னாள் இஸ்ரோ தலைவரும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
'திருக்குறளுக்கு வள்ளுவர் காப்புரிமை கேட்கவில்லை' - மயில்சாமி அண்ணாதுரை - கருத்தரங்கம்
சென்னை: "வாழ்க்கை நெறிகளை இரண்டடி திருக்குறளில் அடக்கிய திருவள்ளுவர் காப்புரிமை கேட்டதாக தெரியவில்லை" என்று இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
அவர் மாணவர்கள் மத்தியில பேசுகையில், "அறிவுசார் சொத்துரிமை அனைத்து இடத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள சொத்துரிமைகளுக்கு உரிமை கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு ஒரு ஓவியம் வரையப்பட்டு இருக்கும் என்றால், வரைந்த அவருடைய பெயர் அந்த ஓவியத்தில் கடைசிப் பக்கத்தில் இடம்பெறும். இதுபோன்று காப்பிரைட் என்பது கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று கூறிய வள்ளுவன் அதற்கு காப்புரிமை கேட்டதாக தெரியவில்லை.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களோடு இணைந்து தற்போது அறிவுசார் சொத்துரிமை இணைத்துள்ளோம். தமிழ்நாட்டில் பல்கலைக்கழங்களில் உள்ள 14 இடங்களில் அறிவுசார் சொத்துரிமை குறித்து விழிப்புணர்வு நடக்க உள்ளது என்பதற்காக இணைந்துள்ளோம். இந்தியாவினுடைய முகவரியாக அறிவுசார் சொத்துரிமை தெரியவரும். அதை விவசாயம் முதல் விண்வெளி வரை அனைத்திலும் தெரிய வரும். புதிதாக படைக்கும் பரிமாணமே அறிவுசார் சொத்துரிமையின் எடுத்துக்காட்டாக உள்ளது. வள்ளுவன் எழுதிய அனைத்து குரலுக்கு சொத்துரிமை கேட்கலாம். ஆனால் கேட்கவில்லை, அதே தவறை நாம் செய்ய வேண்டாம் அனைத்திற்கும் நாம் காப்புரிமை பெறுவோம்" என்றார்.