தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கு நன்றி - முதலமைச்சர் எடப்பாடி - edappdi palanisamy tweet

சென்னை : தன் பிறந்தநாளையொட்டி தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

edappadi
edappadi

By

Published : May 12, 2020, 11:10 PM IST

இதுகுறித்து அவர் ட்விட்ரில் கூறியுள்ளதாவது, "எனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழ்நாடு, தெலங்கானா ஆளுநர்கள், மத்திய அமைச்சர் பெருமக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் அனைவரும் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இத்தருணத்தில், எனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

இருப்பினும் தொலைபேசி மூலம் என்னை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஏழை தொழிலாளர்களை சுரண்டும் பாஜக அரசு - ஸ்டாலின் காட்டம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details