தமிழ்நாடு

tamil nadu

மதுரை மாநகரில் 1000 ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு

By

Published : Jun 24, 2020, 7:01 PM IST

cm palanisamy
cm palanisamy

17:13 June 24

மதுரை மாநகரில் 1000 ரூபாய் நிவாரணம் - முதலமைச்சர் உத்தரவு

சென்னை: மதுரையில் குறிப்பிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் உரையாற்றிய அவர், "கரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டு அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். கரோனா தொற்றின் காரணமாக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. 

அந்த வகையில், மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும், பரவை டவுன் பஞ்சாயத்து, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்குட்பட்ட அனைத்து கிராம பஞ்சாயத்து பகுதிகளிலும், நோய்த்தொற்று நிலையை கருத்தில் கொண்டு, சென்னையில் அமல்படுத்தியது போல் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை  ஏழு நாள்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஊரடங்கு சமயத்தில் ஏழை, எளிய மக்களின் சிரமங்களை குறைக்க ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு  தலா 1000  ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 27ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிவாரணம் வழங்கப்படும்" என்றார்.  

இதையும் படிங்க:கரோனா சிக்கிச்சைக்காக மாற்றட்ட ரயில் பெட்டி - முதல் நோயாளி அனுமதி

ABOUT THE AUTHOR

...view details