தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை - முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை

palanisamy
palanisamy

By

Published : Jun 24, 2020, 5:12 PM IST

Updated : Jun 24, 2020, 7:50 PM IST

17:29 June 24

கரோனா தடுப்புப் பணிக்காக 6 அமைச்சர்கள் நியமனம்

  1. 15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
  2. சென்னையில் கரோனா தடுப்புப் பணிக்காக 6 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
  3. சென்னையில் கரோனாவை தடுக்கவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
  4. ஏழை மக்களுக்கு 1000 ரூபாய் நிதியுதவி, மளிகை பொருள்கள் வழங்கப்படுகின்றன

17:25 June 24

சென்னையில் வீடு வீடாகச் சென்று பரிசோதனை

  • சென்னையில் வீடு, வீடாகச் சென்று பரிசோதனை செய்யப்படுகிறது.
  • கரோனா சிகிச்சைக்கு 17, 500 படுக்கை வசதிகள் உள்ளன
  • கரோனா சிகிச்சையளிக்க 600 முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

17:21 June 24

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

  1. முழு ஊரடங்கு அமலில் உள்ள மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அரிசி, ரேஷன்கார்டு தாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்
  2. மண்டலங்களுக்குள் போக்குவரத்து அனுமதியால் கரோனா பரவுவதாக தகவல் வெளியாகியுள்ளது
  3. தேவையான அளவிற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் அனுப்பிவைக்கப்படுவார்கள் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

17:17 June 24

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

  • நாளை (ஜூன் 25) முதல் தனியார் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனங்களுக்கும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதியில்லை
  • ஒரே மண்டலத்திற்குள் இருந்தாலும் நாளை முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஐந்து நாள்களுக்கு  தடை விதிக்கப்படுகிறது
  • ஒரு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டாயம் இ-பாஸ் அனுமதி பெற்றிருக்க வேண்டும்

17:08 June 24

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை

மக்கள் தொகை அதிகம் என்பதால் சென்னையில் கரோனா எளிதாக பரவுகிறது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

கரோனா பரவலைத் தடுப்பது தொடர்பாக பேசிய முதலமைச்சர் பழனிசாமி, தமிழ்நாட்டில் கரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளோம்.  கரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாளை முதல் ஜூன் 30ஆம் தேதி வரை மாவட்டங்களுக்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

Last Updated : Jun 24, 2020, 7:50 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details