சென்னை: தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று (மார்ச் 19) தமிழ்நாடு அரசின் 2022-23ஆம் ஆண்டிற்கான வேளாண்மை, உழவர் நலத்துறைக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வேளாண் பட்ஜெட் அல்ல, வேளாண் மானிய கோரிக்கை தான். கொள்கை விளக்கத்தில் உள்ளதைத் தான் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். விவசாயிகள் நன்மை பயக்கும் வகையில் இல்லை. விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சிக் காலத்தில் தான் வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது, குடிமராமத்து பணி மேற்கொள்ளப்பட்டது, டெல்டா மாவட்டம் பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதியாக அறிவிக்கப்பட்டது. சரியாக நிர்வாகம் இல்லாத அரசு திமுக எனத் தெரிகிறது, கூட்டுறவு நகைக் கடன் பயனாளர்களைக் குறைத்துள்ளனர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
திராவிட மாடல் திட்டத்தில் எந்த திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை. ஏழைக் குடும்பத்தில் உள்ள பெண்களுக்குத் திருமண நிதியுதவி தாலிக்கு தங்கம் திட்டத்தை அம்மா கொண்டு வந்த திட்டம் எனக் கைவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறை ஆண்டுதோறும் தாலிக்கு தங்கம் திட்டம் செயல்பாட்டில் தான் உள்ளது. தேர்தலுக்கு முன்னர் மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கு வேண்டும் என பல்வேறு தேர்தல் அறிக்கைகளை திமுக அறிவித்துவிட்டு தற்போது செயல்படுத்தத் தவிர்க்கின்றனர்.
இது வேளாண் பட்ஜெட் அல்ல, விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது - எடப்பாடி அனைத்து துறைகளின் நிதியையும் சேர்த்து வேளாண் பட்ஜெட் என்று மாயையை ஏற்படுத்தியுள்ளனர். அதிமுக ஆட்சிதான் விவசாயிகளுக்குப் பொற்கால ஆட்சி. 43 லட்சம் நகைக் கடன் பெற்றவர்களில், 13 லட்சம் பேர் மட்டுமே கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தேர்வு செய்திருக்கிறார்கள். மீதமுள்ள நபர்களின் நிலைமை என்ன என்பது தெரியவில்லை.
தமிழ்நாடு மாடல் என்று அதிமுக அரசு உருவாக்கி இருக்கிறது, ஆனால் திமுக திராவிட மாடல் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள், திமுக 9 மாத காலத்தில் என்ன செய்தார்கள் எனக் கேள்வி எழுப்பினார். அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த விருதுகளைப் பெற்ற அரசு அதிமுக அரசு" என்றார்.
இதையும் படிங்க:விதை முதல் விளைச்சல் வரை... மின்னணு வேளாண்மைத் திட்டம்..!