சென்னை:விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் பகுதியில் கள்ளச்சாரய விற்பனை படுஜோராக நடந்து வந்துள்ளது.இங்கு கள்ளச்சாரயம் குடித்த பலரும் வயிற்று வலியால் துடித்திருக்கின்றனர். மேலும் சிலர் ரத்த வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் சிலர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்த பிறரையும் மருத்துவமனையில் அனுமதித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் கள்ளச்சாராய கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். மேலும், இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில்,"மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதால் சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் மரணம் அடைந்ததாகவும், மேலும் 16 பேர் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க பட்டிருப்பதாகவும் வருத்தத்துக்குரிய செய்திகள் வருகிறது.