தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சாட்சியங்கள் பதிவு..! - chennai news in tamil

kodanad murder and robbery case: கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் காரத்திகை பாலன், எடப்பாடி பழனிச்சாமியிடம் சாட்சியங்களை பதிவு செய்தார்.

kodanad murder and robbery case
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சாட்சியங்கள் பதிவு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 4, 2024, 10:49 PM IST

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், அந்த வழக்கு தொடர்பாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனை அடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புப்படுத்திப் பேச தனபாலுக்குத் தடை விதிக்கக் கோரியும், 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கட்சிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கைக் குலைக்கும் நோக்கத்தில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோல் பேட்டிகள் அளித்து வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க இயலாது எனவும், தமது வீட்டில் சாட்சியத்தைப் பதிவுசெய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று வழக்கறிஞர் ஆணையராக வழக்கறிஞர் எஸ்.கார்த்திகை பாலனை நியமித்து உத்தரவிடப்பட்டது. ஒரு மாதத்திற்குள் சாட்சிகளை பதிவு செய்து முடிக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதி, அதனை அறிக்கையாக ஜனவரி 12ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞர் கார்த்திகை பாலன், சென்னையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் கோடநாடு கொலை கொள்ளை வழக்குத் தொடர்பாக இன்று (ஜன.04) சாட்சியம் பதிவு செய்தார். பதிவு செய்யப்பட்ட சாட்சியங்களை ஜனவரி 12ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:லியோ திரைப்பட விவகாரம்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தரப்பில் விளக்கம் கேட்ட நீதிமன்றம்..!

ABOUT THE AUTHOR

...view details