சென்னை:அதிமுக உறுப்பினர் எனக்கூறி திண்டுக்கல்லைச்சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், 'ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றைத் தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.
இந்த வழக்கில் இடைக்காலப்பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கும், உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும், பதவி நீக்கம் செய்யவும், புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யவும் தடை விதிக்க வேண்டும் என்றும்’ இடைக்கால கோரிக்கை வைத்துள்ளார்.