தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொள்ளை வழக்கு குற்றவாளிகளுக்கு திமுக உதவுகிறது- எடப்பாடி பழனிசாமி - பணம் சம்பாதிப்பதே நோக்கம்

கோடநாடு கொள்ளை வழக்கு குற்றவாளிகளுக்கு திமுக உதவுகிறது என முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

eps assert vendetta politics by dmk  vendetta politics  vendetta politics by dmk  dmk  eps  Edappadi Palaniswami  Edappadi Palaniswami speech about vendetta politics  Edappadi Palaniswami speech about dmk  திமுகவுக்கு எடப்பாடி பதிலடி  எடப்பாடி பதிலடி  எடப்பாடி  சென்னை செய்திகள்  கரப்ஷன் கலெக்ஷன்  பணம் சம்பாதிப்பதே நோக்கம்  பாதிப்பு
திமுகவுக்கு எடப்பாடி பதிலடி

By

Published : Aug 19, 2021, 10:37 PM IST

சென்னை: சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநரை சந்தித்த அவர், திமுக அரசு மீது புகார் மனு அளித்தார்.

பணமே குறிக்கோள்

புகார் மனுவில், திமுக அரசு முறைகேடு செய்து பணம் சம்பாதிப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும், இதனை மறைக்கவே அதிமுக நிர்வாகிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஊழல் செய்வதே திமுக அரசின் பிரதான நோக்கமாக உள்ளதாகவும், அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் தற்போதைய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சியில் நிறைவடையாத பணிகளுக்கும், கமிஷன் வழங்கும் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே, பாக்கி பணம் வழங்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழிவாங்கும் நடவடிக்கை

மேலும், "மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை நிறுத்தி வைத்துள்ளதால், கிராமப்புற மக்கள் கரோனா பெருந்தொற்று காலத்திலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

திமுக அரசு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அரசின் தவறுகளை மறைப்பதற்காக அதிமுக வழக்குகளை புனைவதாகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

திமுகவினர் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை மூடி மறைக்க முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு திமுக உதவுகிறது" எனவும் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் - விக்கிரமராஜா எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details