தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி பதிவியேற்க உள்ளார்.
தற்போது தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைக்க உள்ள நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சர் பதவியை நேற்று (மே.3) ராஜினாமா செய்தார்.
ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர், புதிய அரசு அமையும் வரை தொடர்ந்து பணியாற்றுமாறு எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொண்டார்.
15வது சட்டப்பேரவையைக் கலைத்த உத்தரவு தற்போது, தமிழ்நாட்டில் 15ஆவது சட்டப்பேரவையைக் கலைத்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் ஸ்டாலின் முன்னுள்ள சவால்கள்?