ஓபிஎஸ் தனது மகனை மத்திய அமைச்சராக்கிட மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஈபிஎஸ் தரப்புதான் செக் வைத்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறி வருகின்றனர். இதனால் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக அரசியல் செய்து வந்த ஓபிஎஸ்-ஈபிஎஸ் இருவருக்குமிடையே கடும் பனிப்போரே நிலவி வருவதாகவும் அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக சீனியர்களுடன் எடப்பாடி ஆலோசனை! - அரசியல்
சென்னை: கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் அதிமுக சீனியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
![அதிமுக சீனியர்களுடன் எடப்பாடி ஆலோசனை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3456876-thumbnail-3x2-admk.jpg)
admk
இந்நிலையில், இன்று காலை திடீரென அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்களுடன் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஆட்சியைக் கவிழ்த்திட திமுக தரப்பு காய் நகர்த்தி வரும் நிலையில், இன்னும் சில தினங்களில் சட்டப்பேரவை கூட இருக்கிறது. அப்போது, சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எப்படி கையாள்வது உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக சீனியர்களுடன் எடப்பாடி ஆலோசனை!