சென்னை:தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக கடந்த அக்டோபர் 21ஆம் தேதி அன்று குடல் இறக்கத்திற்கான அறுவை சிகிச்சை செய்துகொண்டதன் தொடர்பான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அன்றைய தினமே மாலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.