சென்னை:தமிழகத்தில் ஆவின் நெய் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.17) வெளியிட்ட டிவிட்டர் பதிவில், "ஆவின் நெய் விலையை ஒன்பது மாதத்தில் மூன்று முறை உயர்த்தி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் இந்த விடியா அரசிற்கு எனது கடுமையான கண்டனங்கள். கடந்த மார்ச் மாதம் ரூ.515-க்கு கிடைத்த ஆவின் நெய் தற்போது ரூ.115 உயர்த்தப்பட்டு ரூ.630-க்கு விற்கப்படுகிறது.
ஏழைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் செய்வது தான் விடியல் அரசா? - இபிஎஸ் விளாசல்! - விடியா அரசு
ஆவின் நெய் விலை உயர்வுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
எளியோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு ஆவின் பொருட்களை எட்டாகனியாக்கி, இனி பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிற நிலைக்கு தள்ளியுள்ளது இந்த விடியா அரசு. இன்று வெண்ணை விலையையும் கிலோவிற்கு ரூ.20 உயர்த்தியுள்ளனர். எளிய மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச ஊட்டச்சத்தை பால் மற்றும் பால் பொருட்கள் மூலம்தான் பெற்று வருகின்றனர். தற்போது அதுகூட அவர்களுக்கு கிடைக்க விடாமல் தடுப்பதற்கு பெயர்தான் விடியலா?" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ’இனி வாரிசும் நாங்க தான், துணிவும் நாங்க தான்: ரெட் ஜெயண்ட் அதிரடி முடிவு