தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி - chennai news in tamil

கரோனா நோயினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் உயிரிழக்க நேரிட்டால், இறப்புச் சான்றிதழில் கரோனா நோய்த்தொற்றினால்தான் இறந்தார்கள் என்ற சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

edapadi-palanisamy-urges-to-tamilnadu-to-put-correct-reason-on-corona-death-certificate
'இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்'

By

Published : Jun 8, 2021, 7:02 PM IST

சென்னை:இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று காரணமாக தமிழ்நாட்டில் நேற்றுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27,356 ஆகும். கடந்த ஒரு சில வாரங்களாக கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் இறப்புச்சான்றிதழ்களில் கரோனாவால் இறந்ததாக குறிப்பிடமால், வேறு காரணங்களால் இறந்தார்கள் என குறிப்பிடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

இறப்பு சான்றிதழில் வேறு காரணங்கள் குறிப்பிடுவதால், கரோனா நோய்த்தொற்றால் பெற்றோர்களை இழந்துவாடும் குழந்தைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள நிவாரண உதவிகள் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி குறித்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து மாநில அரசுகளும், மாவட்ட அலுவலர்கள் வாயிலாக பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளைக் கணக்கெடுத்து 24 மணிநேரத்திற்குள் சிறார் நலக்குழுக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கரோனா நோயினால் பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு, அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் சரியான முறையில் சென்று சேர்வதையும், கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கரோனா எதிர்பாற்றல் சக்தி அதிகரிப்பு - மருத்துவ இயக்குநர் தகவல்

ABOUT THE AUTHOR

...view details