தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏங்க இருங்க - போலீஸ்காரர்களைப் பார்த்து கொந்தளித்த ஈபிஎஸ் - police

சென்னையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவினரைப் பார்த்து ஆக்ரோஷமாகப் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதன் பின்னணி குறித்து அறிந்துகொள்வோம்

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 19, 2022, 9:42 PM IST

சென்னை:சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை எதிர்க்கட்சித் துணைத்தலைவராக அங்கீகரிக்காத நிகழ்வைக் கண்டித்து, எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அதிமுகவினர், சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே செய்தியாளர்கள் சந்திப்பினை நடத்த எடப்பாடி பழனிசாமி முனைப்புக் காட்டி வந்தார்.

அப்போது முறையான அனுமதி பெறவில்லை எனக்கூறி, காவல் துறையினர் எடப்பாடி பழனிசாமியைக் கைது செய்ய முயன்றனர். அப்போது ஆக்ரோஷம் அடைந்த அவர், ' ஏங்க இருங்க... கம்முனு இருங்க.. நிருபர் எல்லாம் இருக்காங்கல்ல... என்னாங்க...’ எனக்கேட்டு, கோபப்பட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் சலசலப்பு நிலவியது. அப்போது அவர் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஏங்க இருங்க - போலீஸ்காரர்களைப் பார்த்து கொந்தளித்த ஈபிஎஸ்

இதையும் படிங்க: "காங்கிரஸில் எனது பணி என்னவென்று புதிய தலைவர் தான் தீர்மானிப்பார்" - ராகுல் காந்தி!

ABOUT THE AUTHOR

...view details