தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் சொத்துகள் முடக்கம் - மெர்க்கன்டைல் வங்கி முன்னாள் தலைவர் சொத்து

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் நேசமணி மாறன் முத்துக்கு சொந்தமான 205.36 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் சொத்துகள் முடக்கம்
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் சொத்துகள் முடக்கம்

By

Published : Dec 27, 2022, 8:01 AM IST

சென்னையை சேர்ந்த தொழிலதிபரும், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவருமான நேசமணி மாறன் முத்து என்ற எம்.ஜி.எம். மாறன், கடந்த 2005-2006 மற்றும் 2006-2007 ஆகிய நிதியாண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள இரு நிறுவனங்களில் 5 கோடியே 29 லட்சத்து 86 ஆயிரத்து 250 சிங்கப்பூா் டாலர் முதலீடு செய்தாா்.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டப்படி இந்தியாவில் வசிக்கும் ஒருவா், இந்திய ரிசா்வ் வங்கியின் அனுமதியின்றி, வெளிநாட்டில் சொத்துகளைப் பெற்றாலோ அல்லது இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்தாலோ அவரது இந்தியச் சொத்தை பறிமுதல் செய்யும் அதிகாரம் அமலாக்கத் துறைக்கு உள்ளது.

இந்திய ரிசா்வ் வங்கியிடம் அனுமதி பெறாமல் சிங்கப்பூா் நிறுவனங்களில் எம்.ஜி.எம். மாறன் முதலீடு செய்துள்ளதாகவும், இது அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் மோசடி என அவருக்கு சொந்தமான சுமார் 205.36 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்தும் முடக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.ஜி.எம் மாறன் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், மாறன் சொத்துகளை முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சென்னையில் மேலும் ஒரு போலி என்ஐஏ அதிகாரி கைது

ABOUT THE AUTHOR

...view details