சென்னை: முன்னாள் மத்திய சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சரும், தற்போதைய நீலகிரி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் பினாமி நிறுவனமான கோவை ஷெல்டர்ஸ் புரமோட்டர்ஸின் 15 அசையா சொத்துக்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தனது 'X' சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்து உள்ளது.
திமுக எம்.பி ஆ.ராசாவின் 15 பினாமி நிறுவன சொத்துக்களை கையகப்படுத்திய அமலாக்கத்துறை! - Kovai Shelters Promoters India Pvt
DMK MP A Raja: திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் பினாமி நிறுவனத்துக்கு சொந்தமான 15 அசையா சொத்துகளை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Etv Bharat
Published : Oct 10, 2023, 4:07 PM IST
மேலும், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தனது விளக்கத்தை அளித்துள்ளது.
இந்த செய்தியில் அமலாக்கத்துறையின் முதற்கட்ட தகவல் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்திக்குழுவினர் விரைவில் பதிவு செய்வார்கள்