தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலீடு வாய்ப்பு: இந்திய தொழில் துறைக்கு அழைப்பு! - chennai foreign investors meet

சென்னை: லத்தீன் அமெரிக்க நாடுகளில் மருந்து உற்பத்தி, சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புள்ளதாக இந்தியாவுக்கான ஈக்வேடார் நாட்டுத் தூதர் அழைப்புவிடுத்தார்.

Ecuador
ஈக்வேடார்

By

Published : Mar 30, 2021, 8:08 PM IST

Updated : Mar 31, 2021, 3:12 PM IST

வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் சிறு முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டி உதவும் அமைப்பான ஃபாரின் இன்வெஸ்டார்ஸ் கவுன்சில் சார்பாக 'கரோனா தொற்றுக்குப் பிந்தைய இந்தியப் பொருளாதார வளர்ச்சி' என்னும் கருத்தரங்கம் சென்னையில் இன்று (மார்ச் 30) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய ஈக்வேடார் நாட்டுத் தூதர் ஹெக்டர் பூடா ஜெக்கோம், "தமிழ்நாடு மக்கள் லத்தீன் அமெரிக்க மக்களைப் போல உள்ளனர். இருவருக்கும் ஏராளமான ஒற்றுமைகள் உள்ளன.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளுக்கு இந்தியாவில் தீர்வு உள்ளது. ஆனால் அங்குள்ள நாடுகள் அமெரிக்கா, ஜப்பான், கொரியா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளையே நாடிவருகின்றன.

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சிபெற புதிய தொழில் முதலீடுகள், தொழில் கூட்டுறவுகள் தேவைப்படுகின்றன. இங்குள்ள நிறுவனங்களுக்கு லத்தீன் அமெரிக்காவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இஸ்ரேலில் உள்ள தொழில்நுட்பத்தைவிட இந்தியாவில் சிறந்த தொழில்நுட்பம் உள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் மருந்துப் பொருள்களின் விலை இந்தியாவைவிட 20 மடங்கு அதிகமாக உள்ளது. மருந்து உற்பத்தி, மருத்துவச் சேவை, அக்குபஞ்சர் போன்ற புதிய வகை மருத்துவச் சேவை ஆகியவற்றுக்கான தேவை உள்ளது.

இந்தியாவிலிருந்து மிகவும் தொலைவில் உள்ள நாடாக ஈக்வேடார் அமைந்துள்ளது. அமெரிக்கா வாயிலாக விமான சேவைகள் இயக்கப்பட்டால், இரு நாடுகளுக்கு இடையேயான சுற்றுலா மேம்படும்" என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஃபாரீன் இன்வெஸ்டார் கவுன்சில் தென்னிந்திய தலைவர் சரவணன், ஆசிய அரேபிய தொழில் துறை கூட்டமைப்புத் தலைவர் ஆர்.எல். கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:அதை மட்டும் செய்யாதீங்க - தொண்டரின் காலில் விழுந்த மோடி!

Last Updated : Mar 31, 2021, 3:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details