தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பட்ஜெட் 2020-21: எல்ஐசி பங்குகள் விற்பனையை வரவேற்கலாம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

சென்னை: எல்ஐசியின் 51 சதவிகித பங்குகளை கையில் வைத்துக்கொண்டு மீதி பங்குகளை மக்களுக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் திட்டத்தை வரவேற்கலாம் என பொருளாதார நிபுணர் நாகப்பன் பேட்டியளித்துள்ளார்.

Economist Nagappan Shared his View on Budget To Etv Bharat
Economist Nagappan Shared his View on Budget To Etv Bharat

By

Published : Feb 1, 2020, 11:13 PM IST

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணர் நாகப்பன் அளித்த பேட்டியில், “தனிநபர் வருமானம் குறித்து ஐந்து அடுக்குகளாக செய்யப்பட்டிருக்கும் மாற்றங்கள் நிச்சயம் தனி நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புதிய வரிவிதிப்பு முறையை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் வேறு 70 விதமான வரி விலக்குகள் பெற முடியாது.

டிவிடண்ட் டிஸ்ரிபியூசன் வரியை பொறுத்தவரை முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆண்டு வருமானம் ஐந்து லட்சம் ரூபாய் என்றால் வருமான வரி இருந்தால் கட்டலாம், இல்லையேல் கட்டவேண்டியது இல்லை என்பது பயனுள்ளதாகும்.

பொருளாதார நிபுணர் நாகப்பன் பேட்டி

எல்ஐசி என்பதை தனியார் மயமாக்கலாகப் பார்க்கத் தேவையில்லை. காரணம் எல்ஐசி மக்களால் உருவாக்கப்பட்டதுதான் என்பதால், எல்ஐசியின் 51 சதவிகித பங்குகளை கையில் வைத்துக்கொண்டு மீதி பங்குகளை மக்களுக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் திட்டத்தை வரவேற்கலாம்” என்றார்.

இதையும் படிங்க: 'ஒட்டுமொத்த இந்தியாவை வலுப்படுத்தும் பட்ஜெட்!'

ABOUT THE AUTHOR

...view details