தமிழ்நாடு

tamil nadu

பொருளாதார ஆய்வறிக்கை கூட்டம்: அதிமுக சார்பில் ரவீந்திரநாத் எம்.பி.க்கு அழைப்பு

By

Published : Jan 30, 2023, 3:33 PM IST

பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டத்திற்கு அதிமுக மக்களவைத் தலைவர் என குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பது பேசு பொருளாக மாறியுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை கூட்டம்: ரவீந்திரநாத் எம்.பி.க்கு அழைப்பு
பொருளாதார ஆய்வறிக்கை கூட்டம்: ரவீந்திரநாத் எம்.பி.க்கு அழைப்பு

சென்னை: பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டத்திற்கு அதிமுக மக்களவைத் தலைவர் என குறிப்பிட்டு ஓ.பி.ரவீந்திரநாத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதிமுகவில் ஈபிஎஸ் அணியினர் ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கும் போது அவரது மகனான எம்.பி. ரவீந்திரநாத்தையும் நீக்கினர்.

அது மட்டும் அல்லாமல் மக்களவை சபாநாயகருக்கு, "ரவீந்திரநாத் எம்.பி-யை அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளோம். இதனால் இதற்கு பிறகு மக்களவையில் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பியாக கருதக்கூடாது" என ஈபிஎஸ் தரப்பினர் கடிதம் அனுப்பியிருந்தனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் உச்சகட்ட மோதலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி.க்கு அதிமுக எனக் குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

இதனால் ஈபிஎஸ் தரப்பினர் குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் பொதுக்குழு தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை இது போன்ற பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் எனப் பேசப்படுகிறது.

பொருளாதார ஆய்வறிக்கை கூட்டம்: அதிமுக சார்பில் ரவீந்திரநாத் எம்.பி.க்கு அழைப்பு
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான முயற்சியில் ஈபிஎஸ் அணியினர் இறங்கியுள்ளனர். இந்த நிலையில், ரவீந்திர நாத்திற்கு அழைப்பு விடுத்திருப்பது ஈபிஎஸ் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இதையும் படிங்க: இரட்டை இலை சின்னம்: இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு அதிரடி உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details