தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாட்டின் வளர்ச்சியைத் தாண்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி - நாட்டின் வளர்ச்சியைத் தாண்டிய தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி

2019- 20இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.27 விழுக்காடாக உள்ளது.

Economic growth of Tamil Nadu higher than the economic growth of the country
Economic growth of Tamil Nadu higher than the economic growth of the country

By

Published : Feb 14, 2020, 11:19 PM IST

2020-21ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி தொடர்பான அறிவுப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், 2018-19ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.17 விழுக்காடாக இருந்துள்ளது. 20190-20இல் பொருளாதார வளர்ச்சி 7.27 விழுக்காடாக இருக்கும் என இந்த பட்ஜெட்டில் கணிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கடந்த பட்ஜெட்டில் 2019-20 ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 8.16 விழுக்காடாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இது 7.27 விழுக்காடாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், 2019-20இல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 விழுக்காடாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாடு பட்ஜெட் 2020: வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை விவரங்கள்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details