திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் லிமிடெட் என்ற மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கபில் ராஜேஷ் வர்தவான்.
தனியார் வீட்டுக்கடன் நிர்வாகி புழல் சிறையில் அடைப்பு! - திவான் ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட்
சென்னை: தனியார் வீட்டுக்கடன் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியை தமிழ்நாடு பொருளாதார குற்ற தடுப்புப் பிரிவு காவலர்கள் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.
இவரது சகோதரர் தீரஜ் ராஜேஷ் வர்தவான். இவர்கள் உள்ளிட்ட 11 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முதலீட்டாளர்களுக்கு போலியான சலுகைகளை அறிவித்து தமிழ்நாட்டில் 218 கோடி ரூபாய் அளவில் டி.எச்.எஃப்.எல் நிறுவனம் மோசடி செய்ததாக தனியார் நிறுவனம் அளித்த புகாரில் நீதிமன்ற உத்தரவின்படி இவர்கள் இருவரையும் மும்பை சென்று சென்னை பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.
ஏற்கனவே இவர்கள் இருவர் மீதும் இந்தியா முழுவதும் பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சிபிஐ, அமலாக்கத்துறை அலுவலர்கள் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் மும்பை சென்று சிறையில் இருந்தவர்களை நீதிமன்ற அனுமதி பெற்று சென்னை அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.