சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் ஸ்பைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் ஆகாஷ் ஸ்ருதி ஸ்பைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
ஸ்பைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு - தணிக்கை
தமிழ்நாடு முழுவதும் 11 இடங்களில் ஸ்பைஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்து சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்
முன்னதாக இந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் துரைராஜ் மற்றும் அவரது மனைவி சாரதா இருவரும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பெங்களூரு ராஜகோபாலபுரம் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களது நிறுவன முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான வட்டி, ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்த பணத்தை பெற்றப்பின், தலைமறைவாகியதால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் கைது