சென்னை கொருக்குப்பேட்டை அருகேயுள்ள டீ கடையின் உள்ளே மண்ணுளி பாம்பு புகுந்துள்ளது. இதுகுறித்து கடைக்காரர் கொருக்குப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஆரிபா தலைமையிலான வீரர்கள், டீ கடையின் உள்ளே சென்று மண்ணுளி பாம்பை லாவகமாக பிடித்தனர்.