தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm - Top 10 news @ 9pm

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9pm

By

Published : May 31, 2020, 8:57 PM IST

தமிழ்நாட்டில் 1,149 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் மேலும் 1149 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,333ஆக உயர்ந்துள்ளது.

சில மணி நேரத்தில் மாறிய அரசாணை

சென்னை: பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை குறைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

ஈ டிவி பாரத் செய்தி எதிரொலி : மகிழ்வுடன் சொந்த ஊர் திரும்பிய மக்கள்!

புதுக்கோட்டை: தமிழ்நாட்டிற்கு கரும்பு வெட்டும் பணிக்கு வந்த ஆந்திர மாநிலத் தொழிலாளர்கள் உணவு, தங்குமிடமின்றி குழந்தைகளுடன் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்தது குறித்து நமது ஈடிவி பாரத்தில் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் தற்போது பத்திரமாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நேசமணிக்கான வழிபாடு; ஓராண்டை கடந்தது #PrayForNesamani

சமூக வலைதளங்களில் ட்ரெண்டான #PrayForNesamani எனும் ஹேஷ்டேக் பதிவிடப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், தற்போது நெட்டிசன்களால் #PrayForNesamani1stAnniversary எனும் ஹேஷ்டேக் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ராணாவுக்கு இரண்டே மாதங்களில் டும் டும் டும்!

நடிகர் ராணாவின் திருமண தேதி குறித்தத் தகவலை, அவரது தந்தை சுரேஷ்பாபு அறிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் உதவி இயக்குனரின் குறும்படத்தில் லீலா சாம்சன்

மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராம் மகேந்திரா இயக்கியுள்ள குறும்படத்தில் நடிகை லீலா சாம்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

திரைப்படமாகும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாறு!

சென்னை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை இயக்குநர் அரவிந்தராஜ் இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'தாயகம் திரும்பிய சதுரங்க சாம்பியன்'

இந்தியாவின் நட்சத்திர சதுரங்க வீரரும், ஐந்து முறை உலக சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த், மூன்று மாதங்களுக்கு பிறகு நேற்று நாடு திரும்பினார்.

ஜுன் 14இல் எதிர்பார்க்கப்படும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

40ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், வருகிற ஜூன் 14 அன்று காணொலி மாநாடாக நடைபெறலாம் எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கரோனாவைக் கண்டறியும் கம்ப்யூட்டர்... ஆராய்ச்சியில் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகம்

லண்டன்: கரோனா வைரஸ் செயற்கை நுண்ணறிவு உதவியுடன், எக்ஸ்ரே வழியாகக் கண்டறியும் கணினி மாதிரிகளை உருவாக்கும் முயற்சியில் கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் களமிறங்கியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details