தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

ஈ டிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

TOP 10 NEWS 9 PM, E TV BHARAT
9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM

By

Published : May 22, 2021, 9:20 PM IST

1. ’பாபா ராம்தேவ்வுக்கு எதிராக பேரிடர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுங்கள்’ - இந்திய மருத்துவக் கூட்டமைப்பு

அலோபதி மருத்துவம் தொடர்பாக அறிவியலுக்கு புறம்பான கருத்தை பேசியுள்ள ராம்தேவ்வுக்கு எதிராக, பேரிடர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

2.டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதியில்லை!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டாலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.

3. புதிய சிபிஐ தலைவரை வரும் திங்களன்று தேர்வு செய்யும் பிரதமர்

சிபிஐ அமைப்புக்கான புதிய தலைவரை பிரதமர் மோடி தலைமையிலான குழு வரும் திங்கள் கிழமை (மே.24) தேர்வு செய்யவுள்ளது.

4. 'அந்த 2,000 ரூபா எனக்கு வேண்டாம்' - ரேஷன் கடையில் சொல்லிவிட்டுச் சென்ற விவசாயிக்கு ஷாக்!

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தான் கரோனா நிவாரண நிதி என்று நிதியை விட்டுகொடுத்த விவசாயிக்கு, ரேஷன் கடையில் இருந்து வந்த குறுஞ்செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

5.பெரு நிறுவனங்களைத் தாக்கும் வைரஸ்!

புதிய வகை வைரஸ் கணினியில் உள்ள பெரு நிறுவனங்களின் தரவுகளை முடக்கி, அதனை மீட்கப் பணம் கோருவதாக தமிழ்நாடு சைபர் கிரைம் காவல் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

6. ஆண் குழந்தைக்குத் தாயான பாடகி ஸ்ரேயா கோஷல்!

பின்னணிப் பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு இன்று (மே.22) ஆண் குழந்தை பிறந்துள்ளது.

7.கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (மே.22) கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக் கொண்டார்.

8. 'மூழ்காத ஷிப்பே ஃபிரெண்ட்ஷிப்': வைரலாகும் ரஜினி - மோகன்பாபு புகைப்படங்கள்!

நடிகர் ரஜனிகாந்த் தனது நண்பரும் நடிகருமான மோகன்பாபுவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

9. கோயில் யானை பராமரிப்பு குறித்து வனத்துறையினர் ஆய்வு

மயிலாடுதுறை, திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ அபயாம்பிகை சமேத ஸ்ரீ மாயூரநாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பாராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது கரோனா ஊரடங்கால் யானை கொட்டகையிலேயே இருந்து வருகிறது. இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை மண்டல அலுவலர் அசோக் குமார் தலைமையில் வனத்துறையினர், கால்நடை பாராமரிப்பு மருத்துவர் முத்துகுமாரசாமி ஆகியோர் கோயிலில் யானை முறையாக பராமரிக்கப்படுகிறதா, தேவையான அளவு அதற்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து யானைக்கு பழங்கள் வழங்கினர். யானைகள் பராமரிப்பது குறித்து யானைப்பாகன் செந்திலுக்கு ஆலோசனைகள் வழங்கியும் சென்றனர்.

10. இன்றும், நாளையும் 4,500 பேருந்துகள் இயக்கம்

வெளி மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details